நவீன கால அடிமைத்தனத்தை ட்ரம்ப் எதிர்கொள்கிறார்: ரஷ்யாவிற்கு பேரிடி..வெளியான அறிக்கை
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்ப் நவீன கால அடிமைத்தனத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய வரி
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) 150 நாட்கள் நீடித்த தற்காலிக 10 சதவீத உலகளாவிய வரி நள்ளிரவில் காலாவதியானதைத் தொடர்ந்து, புதிய நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன.
புதிய வரிக் கட்டணங்களால் பாதிக்கப்படும் பிரித்தானியா உட்பட டசின் கணக்கான நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாக உள்ளது.
வெள்ளிக்கிழமையன்று, ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதும் 12.5 சதவீத வரிக்கட்டணத்தை விதித்தது.
ட்ரம்பின் நிர்வாகம்
கட்டாய உழைப்பு முறையை ஒழிப்பதில் தவறியதாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து ட்ரம்பின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "மிகவும் மோசமான சூழலில் பணிபுரியும் தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இனி உலகளாவிய வர்த்தகத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இறக்குமதித் தடைகளை சட்டமாக்கி அமுல்படுத்துமாறு எங்கள் வர்த்தகப் பங்காளிகளை வலியுறுத்துவதன் மூலம், நவீன கால அடிமைத்தனத்தை அதன் மூலத்திலேயே ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்கொண்டு வருகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-யில் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்க - ரஷ்ய வர்த்தகம் கடுமையாக சரிந்தது; கடந்த ஆண்டு இதன் மொத்த மதிப்பு 4.4 பில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |