உக்ரைன் போருக்காக 300,000 ரிசர்வ் வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ள ரஷ்யா
உக்ரைன் போருக்காக ரஷ்யா 300,000 ரிசர்வ் வீரர்களுக்கு பயிற்சியளித்து தயார் நிலையில் வைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் Krasnaya Zvezda என்ற பிரச்சார ஊடகத்தில் வெளியான செய்தியில், ரஷ்யாவின் பயிற்சி துறை தலைவர் இவான் புவால்ட்சேவ் (Ivan Buvaltsev) இந்த தகவலை கூறியுள்ளார்.
புவால்ட்சேவின் கருத்துப்படி, ஏழு பயிற்சிப் படைகள் மற்றும் எட்டு சிறப்பு பயிற்சிப் படைகள் மூலமாக இந்த 3 லட்சம் வீரர்கள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் படையினர் எப்போது பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது என்பதை புவால்ட்சேவ் குறிப்பிடவில்லை, ஆனால் கட்டுரையின் சூழல் அவர் 2024-ஆம் ஆண்டைக் குறிப்பிடுவதாகக் கூறுகிறது.
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிர்கெய் ஷோய்கூ (Seiger Shoigu), 2023 இறுதியில் ஒன்பது ரிசர்வ் படைகளை அமைத்து, ஒப்பந்த ரிசர்வ் வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்கிடையில், 2023ஆம் ஆண்டில் 3,35,000 பேர் தன்னார்வமாக போரில் இணைந்ததாகவும், 2024ஆம் ஆண்டில் 2,00,000 பேர் இணைந்ததாகவும் ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரில் ரஷ்யா அடைந்த இழப்புகள்
உக்ரைனில் ரஷ்யா அதன் ஆயுதப்படைகளிலும், சாமானிய படை வீரர்களிலும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. உக்ரைனின் தகவல்படி, 2023 நவம்பர் மாதத்தில் மட்டும் 45,720 ரஷ்ய வீரர்கள் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பரில் ஒரே நாளில் 2,030 வீரர்களை இழந்தது ரஷ்யாவின் மிகப்பாரிய இழப்பு என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுவரை 7,43,920 ரஷ்ய வீரர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் பொது தளபதி மையம் கூறியுள்ளது.
ஆனால், ரஷ்யாவிடமிருந்து அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த துல்லியமான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Ukraine War, Russian reserve soldiers, Russian Soldiers