மேற்கத்திய நாடுகளின் முடிவு... ஐக்கிய அரபு அமீரகம், துருக்கியின் உதவியை நாடிய ரஷ்யா
விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியில் இருந்து ரஷ்யா வெண்ணெய் இறக்குமதி செய்கிறது.
வெண்ணெய் திருட்டு
அக்டோபர் 18 முதல் ரஷ்யாவுக்கான வெண்ணெய் ஏற்றுமதியை ஐக்கிய அமீரகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரஷ்யா இதுவரை வெண்ணெய் இறக்குமதி செய்ததில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த டிசம்பரில் இருந்து வெண்ணெய் கட்டி ஒன்றின் விலை 25.7 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரஷ்யாவின் புள்ளியியல் சேவை தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, சில வணிக வளாகங்களில் வெண்ணெய் திருட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை ரஷ்யாவுக்கு 90 மெட்ரிக் டன் வெண்ணெய் வழங்கியுள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து துருக்கியும் ரஷ்யாவுக்கு வெண்ணெய் ஏற்றுமதியை துவக்கியுள்ளது.
மேலும், உள்நாட்டு சந்தைக்கு கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்படுத்தவும் வெண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.
9 சதவிகிதம் அதிகரித்து
லத்தீன் அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வெண்ணெய் இறக்குமதி 2014ல் 25,000 டன்களில் இருந்து இந்த ஆண்டு 2,800 டன்களாக குறைந்துள்ளது. இறக்குமதி குறைவதற்குப் பின்னால் உள்ள காரணிகளில் ஒன்று மேற்கத்திய நாடுகளின் தடைகள் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, போக்குவரத்து மற்றும் தளவாடச் சிக்கல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் உரிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாமை ஆகியவையும் காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவிற்கு வெண்ணெய் வழங்கும் மிகப்பெரிய விநியோகஸ்தரான பெலாரஸ், இந்த ஆண்டு ஏற்றுமதியை 9 சதவிகிதம் அதிகரித்து 110,000 டன்களாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |