ராணுவத்தினருக்கும் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்! போர் பதற்றத்தை மீண்டும் தூண்டிய துப்பாக்கி சூடு
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ராணுவத்தினருக்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துள்ள துப்பாக்கி சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் donetsk மற்றும் lugansk என்ற கிராமங்களில் உக்ரைன் ராணுவத்தினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று இரவு கடுமையான துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
இரவு 9மணியளவில் 20வது முறை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதைபோல் உக்ரைன் ராணுவம் 27 முறையை தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்கள்(OSCE) வெளிட்டுள்ள அறிக்கையில் Donetsk பகுதியில் கடந்த வியாழக்கிழமை மட்டும் 189 துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்து இருப்பதாகவும், Lugansk பகுதியில் இதுவரை 402 துப்பாக்கி சூடு சம்பவமும் அதி 129 கடந்த புதன்கிழமை மட்டும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மோதலானது உக்ரைனின் கிழக்கு கிராமமான Stanytsia-Luganska உள்ள மழலையர் பள்ளியில் நடத்த பட்ட பீரங்கி தாக்குதலுக்கு அடுத்தநாள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தாக்குதலின் போது அங்கிருந்த 20 குழந்தைகள் மற்றும் 18 பணியாளர்கள் பத்திரமாக தப்பியுள்ளனர்.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் மெது படையெடுக்கலாம் என்ற பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த தாக்குதல் ரஷ்யாவிற்கு போர்தொடுக்க நல்ல காரணமா அமைந்து விடுமோ என்ற அச்சத்தையும் கிளப்பியுள்ளது.