உலகளாவிய வங்கி அமைப்பிலிருந்து ரஷ்யாவுக்கு தடை!
மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை முக்கிய சர்வதேச வங்கி அமைப்பில் இருந்து கணிசமான அளவில் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
பிரித்தானியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பல ரஷ்ய வங்கிகளை ஸ்விஃப்ட் (SWIFT) என்ற உலகளாவிய வங்கி அமைப்பிலிருந்து விலக்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
உலக நாடுகள் பொருளாதார தடைகள் உட்பட பல தடைகளை விதித்து ரஷ்யாவிற்கு எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்து வரும் நிலையிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது படைகளுக்கு தொடர்ந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டதை அடுத்து, உக்ரைனின் தலைநகரான கீவில் நான்காவது இரவாக (சனிக்கிழமையன்று) வான்வழித் தாக்குதல் நத்தப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா மீது மேலும் ஒரு சக்திவாய்ந்த தடையாக இது விதிக்கப்பட்டது.
SWIFT அமைப்பிலிருந்து நீக்கப்பட்டால் ரஷ்யா எவ்வாறு பாதிக்கப்படும்?