கடற்படை தளம் கொண்ட உக்ரைனிய நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா., வெளியான புகைப்படங்கள்
கடற்படை தளம் மற்றும் 100,000 மக்கள்தொகை கொண்ட சிறிய உக்ரேனிய நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
ரஷ்யப் படைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டின் தெற்கில் உள்ள பெர்டியன்ஸ்க் (Berdyansk) எனும் ஒரு சிறிய உக்ரேனிய நகரத்தைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
பெர்டியன்ஸ்க், தென்கிழக்கு உக்ரைனில் சுமார் 100,000 மக்கள் வசிக்கும் அசோவ் கடலின் வடக்கு கடற்கரையில் கடற்படை தளத்துடன் கூடிய துறைமுக நகரமாகும்.
இது கிரிமியா தீபகற்பத்திற்கு அருகில் அமைந்துள்ளது, இந்த நகரத்தை ரஷ்யா ஏற்கெனெவே ஒருமுறை 2014-ல் உக்ரைனிலிருந்து அபகரித்ததாக கூறப்படுகிறது.
நகரின் செயல் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்விட்லோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நகரவாசிகளுக்கு வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், ரஷ்யப் படைகள் ஊருக்குள் வந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதை உறுதிப்படுத்தினார்.
மேலும், ரஷ்ய படையினர் பெர்டியன்ஸ்க் நகர கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை கைப்பற்றிவிட்டதாக கூறினார்.
உக்ரைன் அதிகாரிகள் பணியைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், ஆனால் ரஷ்யர்களுக்கு கீழ் பணியாற்றுவதற்குப் பதிலாக டவுன்ஹால் அலுவலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.
பெர்டியன்ஸ்க் நகருக்கும் ரஷ்யாவின் இராணுவ வாகனங்கள், டாங்கிகள் ஊடுருவிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகிவருகின்றன.





