போர் பதற்றத்தில் சரிவை சந்தித்த பங்குச்சந்தை: உச்சத்தை தொட்ட எண்ணெய் விலை!
ரஷ்யா உக்ரைன் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தில் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.
உக்ரைனின் எல்லையில் ரஷ்ய படைகள் பெரும் அளவில் குவிக்கப்பட்டதில் இருந்தே, கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்ய பகுதிகளை சுற்றி உள்ள பிராந்தியங்களில் உள்ள பங்குகள் பெருமளவு சரிந்துள்ளது.
உலகின் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பங்கு சந்தை சரிவினால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்ந்ததால் இரண்டு வாரத்தில் டாலர் மதிப்பு பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
பங்கு சந்தை சரிவானது ரஷ்யா உக்ரைன் மட்டுமல்லாது, ஐரோப்பிய பிராந்தியதின் பங்குசந்தைகளையும் 1.6% முதல் 3% வரை பாதித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடுத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யா தள்ளப்படும் என G7 நாடுகளை சேர்ந்த நிதிதுறை அமைச்சர்கள் எச்சரித்து இருந்த நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.
ஏற்கெனவே சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் இடையே, எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடான ரஷ்யாவில் நிலவிவரும் நெருக்கடியால் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.