1 லட்சம் ட்ரோன்கள்! உக்ரைன்- ரஷ்யா போரில் இதுவரை அழிக்கப்பட்ட ஆயுதங்களின் புள்ளிவிவரம்
ரஷ்யா மீது உக்ரைன் கடந்த 24 மணி நேரத்தில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்திய ரஷ்ய வான் பாதுகாப்பு படை
உக்ரைனிய பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட 105 க்கும் அதிகமான ஆளில்லா ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்க தயாரிப்பான 11 ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளையும் ரஷ்ய படைகள் வெற்றிகரமாக வழிமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
இதில் தரைவழி தாக்குதலுக்காக மாற்றியமைக்கப்பட்ட S-200 ரக எதிர்ப்பு ஏவுகணையும் உள்ளடங்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஒருங்கிணைந்த தாக்குதல்
டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலில், ரஷ்யா உக்ரைனின் ராணுவ திறனை முடக்கும் நோக்கில் கிட்டத்தட்ட 154 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இவற்றில் உக்ரைனிய படைகள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினர் தங்கியிருந்த முகாம்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

அழிக்கப்பட்ட ஆயுதங்களின் முழு விவரம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் அழிக்கப்பட்ட ஆயுதங்களின் பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
அதன்படி உக்ரைனுடனான போர் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 1,11,231 ஆளில்லா விமானங்கள், 670 போர் விமானங்கள், 283 ஹெலிகாப்டர்கள், 1,651 மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஆயுதப் படை பிரிவினர் வெளியிட்ட தகவலில், போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 5,00,000 அதிகமான ராணுவ வீரர்களை கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ ரஷ்ய ராணுவம் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |