உக்ரைன் போரை நிறுத்த நேரில் சந்திக்கும் ட்ரம்ப், புடின்? இடம் இதுதானாம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இருவரும் சவுதி அரேபியாவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் சந்திப்பு
ட்ரம்ப்பும், புடினும் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடியதாக கூறப்பட்ட நிலையில், Kommersant செய்தி ஊடகம் தலைவர்கள் சந்திக்கும் இடம் குறித்து தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த புடினை சவுதி அரேபியாவில் ட்ரம்ப் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
அதாவது, ரியாத் நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று Kommersant குறிப்பிடவில்லை என்றாலும், முந்தைய அறிக்கைகள் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதிகளில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்த
புடின் மற்றும் ட்ரம்ப் இடையிலான சந்திப்புக்கும் பிரதிநிதிகள் குழு தயாராகும் என Axios தெரிவித்தது.
அதேபோல் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில், நீண்டகால வெளியுறவுக் கொள்கை தூதர் யூரி உஷாகோவ், வெளியுறவு புலனாய்வு சேவை தலைவர் செர்ஜி நரிஷ்கின் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழுவை புடின் கூட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் உக்ரைன், ரஷ்யாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெலொக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ மற்றும் ஜனாதிபதி புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகவ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
மேலும், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க டிமிட்ரிவ் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |