ஒரு வாரத்தில் 1,920 ட்ரோன், ,790 குண்டுகள் வீசி தாக்குதல்: உக்ரைனின் 4 முக்கிய அறிவுறுத்தல்கள்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,920 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
வான் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.920 ட்ரோன்கள் மற்றும் 1,790 வழிகாட்டப்பட்ட குண்டுகள் மற்றும் 17 ஏவுகணைகள் கொண்டு உக்ரைனை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தற்காப்பு மற்றும் பதிலடி நடவடிக்கைகளை பலப்படுத்துவதன் அவசியம் குறித்து ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய போது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்ட கருத்தில், ரஷ்யாவின் தாக்குதல்களை சமாளிக்க தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனை எதிர்கொள்ள சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் தங்களது உயர்மட்ட அதிகாரிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார்.
4 முக்கிய அறிவுறுத்தல்கள்
வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தி தற்காப்பிற்கான பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்துதல்.
எதிரி படையின் தாக்குதல் மூலத்தை முறியடிப்பதற்கான திறனை உக்ரைன் அதிகரிக்க வேண்டும்.
புதிய ட்ரோன் ஒப்பந்தங்கள் மூலம் தொழில்நுட்ப சமநிலையை உருவாக்குதல்.
ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தல். ஆகியவற்றை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்னிலைப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |