நீர்மூழ்கிக் கப்பல்களை முதல் முறையாக பயன்படுத்தினோம்: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
நீர்மூழ்கி கப்பலின் ஏவுகணைகளை கொண்டு உக்ரைனை ரஷ்யா முதல் முறையாக தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
சோவியத் கால போர் கப்பலான மாஸ்க்வாவை ரஷ்யா இழந்தில் இருந்தே, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரபடுத்தியுள்ளது.
மாஸ்க்வா கப்பலில் வைக்கப்பட்டு இருந்த வெடிமருந்து வெடித்ததில் தான் கப்பல் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய தெரிவித்தது, ஆனால் ரஷ்யாவின் பயங்கரமான போர் கப்பலை உக்ரைன் ராணுவம் தான் தங்களது கப்பல் தடுப்பு ஏவுகணைகள் கொண்டு அழித்ததாக தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், மாஸ்க்வா கப்பலை ரஷ்யா இழந்ததற்கு பழிவாங்கும் அடிப்படையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலானது உக்ரைனின் ராணுவ இலக்குகளை கலிப்ர் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ராணுவத்தின் துருப்புகளை சிதறடித்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்!
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரேனிய இலக்குகளுக்கு எதிராக நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்களைப் ரஷ்யா முதல் முறையாக பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.