பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம்

Russo-Ukrainian War Russian Federation
By Arbin Jul 31, 2026 04:23 AM GMT
Report

ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.

ஆண் கைதிகளை

ரஷ்ய இராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளில் இருந்து தப்பிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருதரப்பும், தங்களை அவமானப்படுத்தவும் மனரீதியாக துன்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிறப்புறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடுமைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம் | Russia Uses Torture As War Weapon

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் மற்றும் உக்ரேனிய அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் ஐ.நா. விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களின் அடிப்படையில்,

ரஷ்யா 2022-ல் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அதன் இராணுவப் படைகள் உக்ரேனிய ஆண் கைதிகளை முதன்மையாகப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் உக்ரேனியப் போர் கைதியான Serhii Boychuk தெரிவிக்கையில், 2022-இல் ரஷ்யர்கள் அவரைச் சிறைபிடித்ததாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அவர் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் ரஷ்யக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ... வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபலத் தம்பதி

பிரான்சில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ... வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபலத் தம்பதி

தற்போது 33 வயதாகும் அவர், மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், தனது பிறப்புறுப்பின் மீது கத்தி வைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

அவர்கள் ஒரு நபரை அவமானப்படுத்தவும் மனதளவில் சிதைக்கவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று, அக்டோபர் 2024-இல் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார்.

உக்ரைனின் முன்னாள் போர்க்கைதிகளில் மற்றொருவரும், ரஷ்யாவின் போர்க்கைதிகள் முகாம்களில் இருந்தபோது பாலியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளான இதே போன்ற அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம் | Russia Uses Torture As War Weapon

இந்த நிலையில், இதுவரை விசாரணைகளில் இருந்து உறுதி செய்யப்பட்டத் தகவல்களின் அடிப்படையில், போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் பாலியல் வன்முறைகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வந்துள்ளதும்; இவை பெரும்பாலும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதும் விசாரணை அதிகாரிகள் குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போரின்போது பொதுமக்களை அடக்கி ஒடுக்கவும் அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவும் எதிரிப் படைகள் நீண்ட காலமாகப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.

உள்நோக்கம் கொண்டவை

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் மற்றும் சிறார்களே முக்கிய இலக்குகளாக உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நடத்திய விசாரணைகளின் அடிப்படையில்,

2022-இல் ரஷ்யா தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றியபோது, ​​ரஷ்யப் படைகள் உக்ரேனியப் பெண்களையும் குறிவைத்துள்ளன.

பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம் | Russia Uses Torture As War Weapon

இருப்பினும், போர் தற்போது இரு தரப்பினரின் வளங்களையும் படிப்படியாகச் சிதைக்கும் வகையிலான மோதலாக மாறியுள்ள நிலையில், போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய ஆண் வீரர்களே பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, போரின்போது ரஷ்யப் படைகளால் பாலியல் வன்முறை இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு விசாரணையில் உள்ள 310 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களில் 280 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் மற்றும் நான்கு பேர் சிறுமிகள் என்றே தெரியவருகிறது.

பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம் | Russia Uses Torture As War Weapon

பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிறப்புறுப்பு சிதைப்பு, மின் அதிர்ச்சி மற்றும் பிறப்புறுப்புகளில் தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதை உத்திகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி, ரஷ்யா ஏற்கனவே அவற்றை மறுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US