ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நாவில் தீர்மானம் தோல்வி! புத்திசாலித்தனமாக முறியடித்த புடின் அரசு
ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பல நாடுகள் ஆதரவு கொடுத்தும் தீர்மானமானது தோல்வியில் முடிந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பெரிய உதவியை வழங்க முன் வந்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தில் 15 நாடுகளில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தது.
ஆனாலும் இந்த தீர்மானமானது தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
அதன்படி ரஷ்யா தனக்கு உள்ள veto அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது என தெரியவந்துள்ளது.
ஒரு அமைப்பு அல்லது சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்து முறியடிப்பதே veto ஆகும்.