உக்ரைன் படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக வெளிநாடு செல்லும் புடின்
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு விளாடிமிர் புடின் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த வாரம் மத்திய ஆசியாவில் உள்ள இரண்டு சிறிய முன்னாள் சோவியத் நாடுகளுக்குச் செல்வார் என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ரஷ்யாவின் 'Rossiya 1' எனும் அரசு தொலைக்காட்சி, விளாடிமிர் புடின் தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கு பயணம் செய்வார் என்றும் பின்னர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தைக்காக இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
துஷான்பேயில், புடின் தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரக்மோனை சந்திப்பார், பின்னர் அஷ்கபாத்தில், அஜர்பைஜான், கஜகஸ்தான், ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உட்பட காஸ்பியன் நாடுகளின் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு வெளியே புடினின் கடைசியாக அறியப்பட்ட பயணம் பிப்ரவரி தொடக்கத்தில் பெய்ஜிங்கிற்கு சென்றது தான்., அங்கு அவரும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் ஒரு "வரம்புகள் இல்லா" (no limits) நட்பு ஒப்பந்தத்தை வெளியிட்டனர், இருவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தேசியவாதிகளை வேரறுக்கவும், கிழக்கு பிராந்தியங்களில் ரஷ்ய மொழி பேசுபவர்களைப் பாதுகாக்கவும், தனது அண்டை நாடுகளின் இராணுவத் திறனைக் குறைக்கவும், மேற்குலகால் ரஷ்யா அச்சுறுத்தப்படாமல் இருக்கவும், பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பியதாக ரஷ்யா கூறுகிறது.
ஆனால், உக்ரைன் இந்த படையெடுப்பை ஏகாதிபத்திய பாணி (imperial-style) நில அபகரிப்பு என்று அழைக்கிறது.
ரஷ்யாவின் பிப்ரவரி 24 படையெடுப்பு உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது, லட்சக்கணக்கானவர்களை இடம்பெயர்ந்தது, அதே சமயம் மேற்கு நாடுகளிடமிருந்து கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுத்தது.
ஆனால், இது சீனா, இந்தியா மற்றும் ஈரான் போன்ற பிற சக்திகளுடன் வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்க ஒரு காரணமாக அமைந்தது என்று புடின் கூறுகிறார்.