அமெரிக்காவின் செயற்கைக்கோள்களை குறிவைப்போம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!
ரஷ்யா - உக்ரைன் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயுத மோதல்களில் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதை ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், அணு ஆயுதப் போர் அச்சங்கள் அதிகடித்த்து வருகிறது. இதற்கு மத்தியில், உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு உதவப் பயன்படுத்தப்படும் மேற்கத்திய வணிகச் செயற்கைக்கோள்களை மாஸ்கோ குறிவைத்து அழிக்கக்கூடும் என்று ஒரு மூத்த ரஷ்ய இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான கான்ஸ்டான்டின் வொரொன்ட்சோவ் (Konstantin Vorontsov), உக்ரேனிய போர் முயற்சிகளுக்கு மேற்கத்திய செயற்கைக்கோள்கள் உதவுகின்றன, இது அவற்றுக்கு தான் ஆபத்து எச்சரித்தார்.
உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் இத்தகைய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவது ஆத்திரமூட்டுவதாக வொரொன்சோவ் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவின் பழிவாங்கும் தாக்குதல்களுக்கான இலக்காக தனியாரால் நிர்வகிக்கப்படும் அரசாங்க உள்கட்டமைப்புகள் இருக்கலாம் என்று அவர் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் குழுவிடம் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயுத மோதல்களில் வணிகம் உட்பட சிவிலியன் விண்வெளி உள்கட்டமைப்பின் கூறுகளை (செயற்கைக்கோள்களை) ஈடுபடுத்துவது பற்றி பேசுவதாக வொரொன்சோவ் மேலும் கூறினார்.
ரஷ்ய இராஜதந்திரி குறிப்பிட்ட செயற்கைக்கோளைக் குறிப்பிடவில்லை. அதேபோல், அமெரிக்கா அல்லது வணிக செயற்கைக்கோள் வழங்குநர்களிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை.