சுக்குநூறாய் தகர்ந்துவிடும்... உலக நாடுகளுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
ரஷ்ய மீதான பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் தகர்ந்துவிடும் என ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான Roscosmos தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஏஜென்சி மீதான சட்டவிரோத தடைகளை நீக்குமாறு, சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் பங்குதாரர்களாக உள்ள வெளிநாடுகளுக்கு Roscosmos தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
ரஷ்ய விண்வெளி ஏஜென்சி மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து வெளிநாட்டு பங்குதாரர்கள் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என Roscosmos தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் தகர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள், அமெரிக்க, பிரித்தானியா அல்லது இந்தியா, சீனா மீது விழக்கூடும் என ரஷ்ய எச்சரித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.