உக்ரைன் அமைதிக்கு திரும்பவில்லை என்றால்..! பகீர் எச்சரிக்கை விடுத்த புடின்
உக்ரைன் அமைதியை நோக்கி நகரவில்லை என்றால் ரஷ்யா தனது இலக்குகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் அடையும் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் தாக்குதலானது விடாமல் நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

டிரம்ப் தலைமையிலான 20 அம்ச அமைதி திட்டத்தில் அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் சில அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் உக்ரைன் பிராந்தியத்தை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்கவும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான சபோரிசியாவை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை என ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக உக்ரைன் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவும், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் புளோரிடாவில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ராணுவத்தின் மூலம் ரஷ்யா இலக்குகளை அடையும்
இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் ஆயுதப்படை கமாண்டு மையத்திற்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், அங்குள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உக்ரைன் அமைதியை நோக்கி நகரவில்லை என்றால் ரஷ்யா இராணுவ நடவடிக்கைகள் மூலம் அனைத்து இலக்குகளையும் அடையும் என்று தெரிவித்துள்லார்.
அப்போது ரஷ்ய படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறி வருவதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |