கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாக்குதல்கள் தொடரும்! உக்ரைனுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் அதன் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாக்குதல்களை தொடரப்போவதாக ரஷ்ய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 12வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கீவின் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு இரு தரப்பும் 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதன் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாக்குதல்களை தொடரப்போவதாக ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov எச்சரித்துள்ளார்.
நேட்டோ உட்பட எந்தவித அமைப்பிலும் இணையமாட்டோம் என உக்ரைன், அதன் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
கிழக்கு உக்ரைனில் உள்ள Donetsk மற்றும் Lugansk ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்.
உக்ரைன் சண்டையை நிறுத்த வேண்டும் அல்லது சரணடைய வேண்டும் ஆகியவை ரஷ்யாவின் கோரிக்கைகளில் அடங்கும்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தாக்குதல்கள் ஒரு நொடியில் நின்றுவிடும் என்று ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.