ரஷ்யா அடிபணியாது... கடும் பதிலடி கொடுக்கும்: எச்சரிக்கை விடுத்த புடின் நிர்வாகம்
ரஷ்யா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தப்பட்டால், தங்கள் இராணுவம் கடுமையாக பதிலடி கொடுக்கும் என புடின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடிபணியாது
ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளது போன்று, பதிலடி மிகத் தீவிரமாக இருக்கும் என்று பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா அல்லது வேறு எந்த வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என்று ஜனாதிபதி புடின் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, ரஷ்யாவை மோசமாக பாதிக்கும் எந்தவொரு இராணுவத் தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்றும் புடின் எச்சரித்திருந்தார். இதனிடையே, அணுசக்தியால் இயங்கும் பியூரெவெஸ்ட்னிக் குரூஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்ததாக புடின் ஞாயிறன்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தயக்கம்
பியூரெவெஸ்ட்னிக் குரூஸ் ஏவுகணையானது உலகின் எந்த வலுவான வான்பாதுகாப்பையும் முறியடிக்கும் திறன் கொண்டது என புடின் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு அழுத்தமளிக்கும் வகையில், தீவிர தாக்குதலுக்கான ஆயுதங்களையும் ஒப்புதலையும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவிடம் கோரியிருந்தது.

இதில் அமெரிக்கா தயக்கம் காட்டிய நிலையில், ஐரோப்பிய நாடுகள் தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் முடிவெடுக்க உக்ரைனுக்கு உறுதி அளித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ரஷ்யா தற்போது கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |