மேற்கத்திய நாடுகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்! ரஷ்யா எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளின் விரோத போக்கிற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருரே ரஷ்யா தனது படைகளை குவித்த நாள் முதல் பதட்டம் நிலவி வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
ஆனால், உக்ரைன் ஆக்கிரமிக்க உள்ளதாக பரவிய செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது.
இந்நிலைியல், மேற்கத்திய சக்திகளின் விரோத போக்கிற்கு தகுந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுப்போம் என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித்ததொடர்பாளர் Maria Zakharova எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ நாடுகளின் தொடர்ச்சியான விரோத நடவடிக்கைகளால் தான் இந்த பிரச்சனை எழுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளின் அனைத்து விதமான விரோத நடவடிக்கைகளை தொடர்ந்தால், இத்தகைய விரோதமான, நட்பற்ற, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தின் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தலைமை தெரிவித்துள்ளதாக Maria Zakharova எச்சரிக்கை விடுத்துள்ளார்.