ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால்... ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த புடின்

Vladimir Putin Europe
By Arbin Aug 13, 2026 12:21 AM GMT
Report

Russia will start seizing European vessels: ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால், ஐரோப்பியக் கப்பல்களைக் கைப்பற்றப் போவதாகப் புடின்.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய வணிகக் கப்பல்களைக் கைப்பற்றத் தொடங்கினால், ரஷ்யாவும் அதே பாணியில் பதிலடி கொடுக்கும் என்று விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.

கப்பல்கள் மீதான தடை

மேலும், எதிரி நாடுகள் என்று அவர் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுக்கப்பல்களைச் சோதனையிடவும் சிறைப்பிடிக்கவும் தனது படைகள் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் பசிபிக் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால்... ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த புடின் | Russia Will Start Seizing Vessels

ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளைப் பார்வையிட்டபோது புடின் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்; அதேவேளை, ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முயன்று வருகிறது;

இதற்காக நூற்றுக்கணக்கான கப்பல்கள் மீதான தடைகளை விரிவுபடுத்துவதுடன், சில கப்பல்களையும் அவற்றின் பணியாளர்களையும் சோதனைகளுக்காகத் தடுத்து வைத்தும் வருகிறது.

தடைகளை மீறுவதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு எதிராக, கடுமையான கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகச் சில ஐரோப்பிய அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் மொத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழிப்போம்... ஜெலென்ஸ்கி வைத்த கோரிக்கை

ரஷ்யாவின் மொத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழிப்போம்... ஜெலென்ஸ்கி வைத்த கோரிக்கை

ஆனால் உண்மையில் இது கடற்கொள்ளை மற்றும் வழிப்பறிக்குச் சற்றும் குறைவானதல்ல என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புடின், இது நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கினால், நாங்களும் அதே பாணியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதுவும், எங்கள் கப்பல்கள் மற்றும் கலன்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிடப்படும் அதே கடல் பகுதிகளில் மட்டுமின்றி, நாங்களே எங்கு அவசியமென்றும் பொருத்தமென்றும் கருதுகிறோமோ அங்கெல்லாம் அப்பதிலடி அமையும் என்றார்.

ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால்... ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த புடின் | Russia Will Start Seizing Vessels

விவரங்கள் தெரியும்

இதனிடையே, ரஷ்யாவின் பசிபிக் கடற்படைத் தளபதி தெரிவிக்கையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற விரோதப் போக்குடைய நாடுகளும் தங்கள் வசதிக்கான கொடிகளை ஏந்திய கப்பல்கள் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்வதாகவும்;

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின் கருத்துக்களின் அடிப்படையில், இவற்றையும் ரகசிய கப்பல் (shadow fleet) என்றும் விவரிக்கலாம் என்றார்.

ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால்... ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த புடின் | Russia Will Start Seizing Vessels

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல்வழிப் போக்குவரத்து குறித்துத் தனது கப்பற்படை விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாகவும், விரோதப் போக்குடைய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் வழித்தடங்கள், அவை ஏற்றிச் செல்லும் சரக்குகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மத்திய தரைக்கடலில் தனது கடற்படையைப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது குற்றம் சாட்டி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சகமும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US