உக்ரைன் இதைச் செய்தால், பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படும்., ரஷ்யா எச்சரிக்கை
பிரித்தானிய ஆயுதங்களுடன் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், பிரித்தானிய இலக்குகளை குறிவைத்து தாக்கல் நடத்துவோம் என ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க லண்டன் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் (Maria Zakharova) கூறியுள்ளார்.
இதையடுத்து, ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தினால், பிரித்தானிய இலக்குகள் மீது மாஸ்கோ பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா எச்சரித்துள்ளார்.
அத்தகைய சூழ்நிலையில் "உக்ரைனின் எல்லை மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பால்" பிரித்தானிய இலக்குகள் தாக்கப்படலாம் என்று ஜகரோவா செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஷ்யா ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில் இதே எச்சரிக்கையை விடுத்திருந்த நிலையில், இப்போது மீண்டும் ஜகரோவா கூறியுள்ளார்.
ரஷ்யா இவ்வாறு சீற்றத்துடன் பதிலளித்தது மட்டுமல்லாமல், உக்ரைன் எல்லையில் அணுசக்தி ஏவுகணை பயிற்சிகளை இந்த மாதம் நடத்துவதற்கு அது ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
United Kingdom, Russia, Ukraine, Ukraine Russia War, UK Russia Relationship