ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளை குறிவைக்கும்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளை குறிவைக்கக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
இன்று காலை மேற்கத்திய தலைவர்களுடன் உரையாற்றிய போது ஜெலன்ஸ்கி இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை அளிக்குமாறு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
ரஷ்ய போரை தற்போதும் நம்மால் நிறுத்த முடியும், மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த முடியும், ஒன்றிணைந்து செயல்பட்டால் அது எளிதானது என்று வாதிட்டார்.
ஏனென்றால், ரஷ்யா உங்களை குறிவைப்பார்கள். ஐரோப்பா இப்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றால், ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளை குறிவைக்கும்.
நாம் அனைவரும் ரஷ்யாவின் இலக்குகள், எங்களுக்கு உதவுவதன் மூலம் நீங்களே உங்களுக்கு உதவலாம் என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், இது ஒரு விரக்தியான, அவநம்பிக்கையான தருணம் என்று ஒப்புக்கொண்டார்.
ஜெலன்ஸ்கிக்கு பதிலளித்த அவர், மேற்கத்திய தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக மேலும் பலவற்றைச் செய்ய முயற்சிக்க வேண்டும் என கூறினார்.