உக்ரைன் போரில் ரஷ்யா நிச்சயம் வெற்றி பெறும்: புத்தாண்டு உரையில் புடின் உறுதி!
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யா நிச்சயம் வெற்றி பெறும் என்று 2026ம் புத்தாண்டு உரையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புடின் புத்தாண்டு வாழ்த்து
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டு உரையில், உக்ரைன் போரில் ரஷ்யா நிச்சயம் வெற்றி பெறும் என்று புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய உரையில் நாட்டு மக்களுக்காக போராடும் ராணுவ வீரர்களை “நம்முடைய நாயகர்கள்” என்று குறிப்பிட்டு புடின் வெகுவாக பாராட்டினார்.
அத்துடன் நாங்கள் உங்கள் மீதும் நம்முடைய வெற்றியின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறிய புடின், புத்தாண்டில் ராணுவ வீரர்களுக்காக ரஷ்ய குடிமக்கள் வேண்டிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷ்யா தன்னுடைய இலக்குகளை அடைந்து நிச்சயம் வெற்றி பெறும் என்றும் புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“The future lies before us, and what it will be like depends largely on us. We are one big family, strong and united. And so we will continue to work and create, achieve our goals, and move only forward. For the sake of our children and grandchildren, for the sake of our great… pic.twitter.com/HrpGyWLYBX
— 🇷🇺Russia is not Enemy (@RussiaIsntEnemy) December 31, 2025
26 ஆண்டுகளை நிறைவு செய்யும் புடின்
1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி பதவியில் இருந்து போரிஸ் யெல்ட்சின் விலகியை தொடர்ந்து, தற்செயலாக புடின் ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அன்று அதிகாரத்திற்கு வந்த புடின் இன்றுடன் தன்னுடைய 26 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |