குகையில் குழந்தைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் பெண்: சில புதிய தகவல்கள்
கர்நாடகா மாநிலத்தில், குகை ஒன்றில் தன் மகள்களுடன் வாழ்ந்துவந்த ரஷ்யப் பெண் குறித்து சில கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் பெண்
சமீபத்தில், கர்நாடகாவிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ரோந்து சென்ற பொலிசார், அங்கு ஒரு குகைக்குள் வெளிநாட்டவரான ஒரு பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
ரஷ்ய நாட்டவரான அந்தப் பெண்ணின் பெயர் மோஹி என்னும் நினா குட்டினா (40). மோஹியுடன், அவரது மகள்களான ப்ரேயா (6) மற்றும் அமா (4) ஆகிய இருவரும் அந்த குகைக்குள் இரண்டு வாரங்களாக தங்கியிருந்துள்ளனர்.
தாங்கள் அந்த குகையில் இயற்கைச் சூழலில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சில புதிய தகவல்கள்
முதலில் தன்னைக் குறித்த விவரங்களை வெளியிட மறுத்த நினா, பின்னர் தன் பிள்ளைகளின் தந்தை யார் என்பது வரையிலான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நினா, சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு பிசினஸ் விடயமாக வந்த இஸ்ரேல் நாட்டவரான 40 வயதுகளிலிருக்கும் ஒருவரை இந்தியாவில் சந்தித்துள்ளார். இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர். தற்போது அவரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
நினாவுக்கும் அந்த இஸ்ரேல் நாட்டவருக்கும் பிறந்த பிள்ளைகள்தான் ப்ரேயாவும் அமாவும். இவர்களைத் தவிர்த்து நினாவுக்கு ரஷ்யாவிலும் ஒரு குழந்தை இருக்கிறதாம்.
தான் கடந்த பல ஆண்டுகளாக 20 நாடுகளில் காடுகளில் வாழ்ந்துவந்ததாக தெரிவித்துள்ள நினா, தனது மகள்களில் ஒருவர் கோவாவிலுள்ள குகை ஒன்றில்தான் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |