உக்ரைன் போரில் சுவிட்சர்லாந்தின் மத்தியஸ்தத்தை ஏற்கமுடியாது: ரஷ்ய தூதர் மறுப்பு
உக்ரைன் போரில் சுவிட்சர்லாந்து மத்தியஸ்தம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ரஷ்யா கூறிவிட்டது.
சுவிஸ் மத்தியஸ்தத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு
பெரிய நாடுகள் பல, உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நாடாக, பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து இருந்து வருகிறது.
சென்ற மாதம், அதாவது, ஜூன் 15ஆம் திகதி, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் வகையில் சுவிட்சர்லாந்தில் ஒரு உலக சமாதான உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்யலாம் என யோசனை கூறியிருந்தார்.
ஆனால், சுவிட்சர்லாந்தின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவிட்டார் ரஷ்ய தூதரான Sergei Garmonin.
என்ன காரணம்?
சுவிட்சர்லாந்து நடுநிலைமையை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார் Sergei Garmonin. சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளதால் ரஷ்யாவால் சுவிட்சர்லாந்தின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவிட்டார் அவர்.
சுவிட்சர்லாந்து ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்காத நிலையிலும் அதன்மீது விமர்சனம்
சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளதுடன், 7.5 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய ரஷ்ய சொத்துக்களை முடக்கியதால், ரஷ்யா சுவிட்சர்லாந்தைக் கடுமையாக விமர்சித்துவருகிறது.
ஆனால், சமீபத்தில்கூட சுவிஸ் அரசு, தனது நடுநிலைத்தன்மையை மேற்கோள் காட்டி, சுவிஸ் தயாரிப்பான கவச வாகனங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
ஆனாலும், ரஷ்யா சுவிட்சர்லாந்தை விமர்சிப்பதை நிறுத்தவில்லை.
ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் சுவிட்சர்லாந்தைக் குறிவைத்து தாக்கிவருவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேசிய Garmonin, அது தவறான குற்றச்சாட்டாக இருக்கலாம் என்றும், ரஷ்யா மீது ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது விவேகமற்ற செயல் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |