வாக்னர் கூலிப்படை இனி உக்ரைனில் சண்டையிடாது, நிதியும் கிடையாது- ரஷ்யா அதிரடி
உக்ரைன் போரில் இனி ரஷ்ய கூலிப்படையான Wagner Group சண்டையிடாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூலிப்படை மறுப்பு
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வாக்னரைக் கொண்டுவரும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிரிகோஜின் கடந்த வார இறுதியில் மாஸ்கோவிற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தினார், அது அவரையும் அவரது படையையும் பெலாரஸுக்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்துடன் முடிந்தது.
வாக்னர் கூலிப்படையின் "கலகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, போரில் பங்கேற்கும் அனைத்து பிரிவுகளும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. ஆனால் பிரிகோஜினைத் தவிர அனைவரும் இந்த முடிவை செயல்படுத்தத் தொடங்கினர்" என்று ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் கர்னல் ஜெனரல் ஆண்ட்ரே கர்டபோலோவ் (Andrei Kartapolov) கூறினார்.
AP/AFP
வாக்னர் கூலிப்படைக்கு அரசு நிதியுதவி செய்யாது
இந்நிலையில், வாக்னர் கூலிப்படையினர் உக்ரைனில் சண்டையிடுவதை நிறுத்துவார்கள் என்று ஆண்ட்ரே கர்டபோலோவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், வாக்னர் கூலிப்படைக்கு இனி அரசு நிதியுதவி செய்யாது என அவர் கூறினார்.
AP
தற்போது, கிரெம்ளினின் இந்த முடிவு குறித்து கூலிப்படை தலைவர் பிரிகோஜினுக்கு அறிவிக்கப்பட்டதாக கர்டபோலோவ் கூறினார்.
வாக்னர் குழுவிற்கு ரஷ்ய கூட்டாட்சி பட்ஜெட்டில் இருந்து நிதியுதவி
ரஷ்யாவில் தனியார் படையாக இருந்தாலும், வாக்னர் குழுமத்தின் இயக்கச் செலவுகள் ரஷ்ய அரசால் ஏற்கப்படுகிறது. வாக்னர் குழுவிற்கு ரஷ்ய கூட்டாட்சி பட்ஜெட்டில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை புடினே ஒப்புக்கொண்டார்.
உக்ரைனுடனான போர் தொடங்கிய பிறகு கடந்த ஆண்டு மட்டும் ரஷ்ய அரசு வாக்னர் குழுமத்திற்கு 8626.2 கோடி ரூபிள் வழங்கியுள்ளது. வாக்னர் குழுவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் சில காலமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் பிரிகோஷின் இதை ஏற்கவில்லை.
AP
Wagner Mercenaries, Yevgeny Prigozhin, Wagner Group, Ukraine War
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |