முடக்கப்பட்ட சொத்துக்களை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை: ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் திட்டவட்டம்
உக்ரைனுக்கு இழப்பீடு அளிக்க ரஷ்யா முன்வராத வரையில், ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள அதன் சொத்துக்களை திரும்பப்பெற வாய்ப்பில்லை என ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கை தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பித் தரப்படும்
ரஷ்யா இழப்பீடு தொகை செலுத்தவில்லை என்றால், போர் நிறுத்தம் அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்த சொத்துக்கள் ரஷ்யாவிற்குத் திருப்பித் தரப்படும் என்பது கற்பனை மட்டுமே என கல்லாஸ் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பை அடுத்து ரஷ்யாவின் 210 பில்லியன் யூரோ ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன், போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் உட்பட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து உக்ரைனுக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம் பொருந்திய நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், கூடவே பெல்ஜியம் இந்த கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ளது. இந்த நாடுகளிலேயே ரஷ்யாவின் பெரும்பகுதி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ அடிப்படை
அந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் லாபத்தை உக்ரைனுக்காக செலவிட ஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும் என இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன் அந்த சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு சட்டப்பூர்வ அடிப்படை உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது விவாதம் எழுந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |