எதிர்பாராத நேரத்தில் பாய்ந்த உக்ரைன் ஏவுகணை: லைவ் ஷோ நடத்திய ரஷ்ய நடிகை உயிரிழப்பு
உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் லைவ் ஷோ நடத்தி வந்த ரஷ்ய நடிகை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் போர் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டும், மில்லியன் கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸில் குமாச்சோவ் என்ற பகுதியில் முன்கள ரஷ்ய வீரர்களை ஊக்குவிப்பதற்காக ரஷ்யா சார்பாக இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த இசை நிகழ்ச்சியை குறி வைத்து உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ரஷ்யாவின் 40 வயது நடிகை பொலினா மென்ஷிக்(Polina Menshikh) கொல்லப்பட்டுள்ளார்.
நவம்பர் 19ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இரு நாடுகளும் தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இதில் ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த நபர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் இந்த தாக்குதலில் 25 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
JUST IN: Russian actress Polina Menshikh was killed by a Ukrainian missile while performing for Russian marines.
— Collin Rugg (@CollinRugg) November 22, 2023
The incident happened in the village of Kumachovo which is 40 miles from the front lines.
The strike was conducted by the Ukrainian military using a US-supplied… pic.twitter.com/7xNtawpBzT
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |