தென் கொரியா எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம்: எச்சரித்த ரேடார் அமைப்புகள்
Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்
தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் சில நிமிட பொழுதில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கடற்கரைக்கு மேலாக உள்ள வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விமானங்கள் டோக்டோ மற்றும் உல்லுங் தீவுகள் அருகே வந்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானங்கள் தென் கொரியாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவின் உடனடி நடவடிக்கை
ரஷ்ய விமானங்கள் நுழைந்ததை அடுத்து தென் கொரியா தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.
ரஷ்ய விமானங்கள் நெருங்கி வருவதை தென் கொரிய ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே அறிந்து போர் விமானங்களை அனுப்பியதாகவும், எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விமானப்படை இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விமானங்களை உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |