உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர்விமானம்! இதோ ஆதாரம்
ஸ்வீடன் வான்வெளியில் அத்துமீறி ரஷ்ய போர் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நோட்டோ அமைப்பில் சேருவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து ஆகியவை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முயற்சி செய்து வருகின்றன.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று ரஷ்ய அதிபரின் கிரம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
Sweden accused Russia of violating its airspace with the An-30 aircraft (observations and aerial photography).
— The RAGE X (@theragex) April 30, 2022
Swedish Air Force fighters were sent to escort the Russian aircraft, the pilot of one of which took this photo.
#Sweden pic.twitter.com/xppR0DWjE1
ஸ்வீடன் நடவடிக்கை கூட்டணி மோதலை நோக்கிய செல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க கூடாது என்றும் ஸ்வீடனை ரஷியா வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ரஷ்ய போர் விமானம் அத்துமீறி தங்கள் வான்வெளியில் நுழைந்ததாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது.
போர்ன்ஹோல்ம் தீவு அருகே பால்டிக் கடலில் இந்த அத்துமீறல் நடைபெற்றது. ஸ்வீடன் வான்வெளிக்குள் ரஷ்ய போர் விமானம் நுழைந்தவுடன், ஸ்வீடன் விமானப்படை விமானங்கள் அதைத் துரத்தியதாகவும் ரஷ்ய விமானத்தை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் ஸ்வீடன் பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தொழில்முறைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது,ஸ்வீடன் விமானியே இந்த புகைபப்டத்தை எடுத்துள்ளார்.
அதை பார்த்த பலரும் ரஷ்யா உக்ரைனை தொடர்ந்து அடுத்த நாட்டையும் சீண்டுகிறது, இது மூன்றாம் உலகக்போர் வருவதற்கான தொடக்கமா என பதிவிட்டு வருகின்றனர். அதனால் world war 3 என ஹேஷ் டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.