ரஷ்யாவின் வெற்றி விழா கொண்டாட்டம்: தூதர்கள் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றிய போலந்து மக்கள்!
போலந்தில் உயிரிழந்த சோவியத் வீரர்களுக்கு மலர் வளையம் வைக்க சென்ற ரஷ்ய தூதர்கள் மீது பொதுமக்கள் சிவப்பு பெயிண்ட் ஊற்றி போராட்டம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது 75 நாளை தொட்டிருக்கும் நிலையில், இரண்டாம் உலக போரில் ஹிட்லர் தலையிலான ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் படைகள் தோற்கடித்ததை கொண்டாடும் வெற்றி விழா மே 9ம் திகதியான இன்று ரஷ்யாவில் கோலாகமாக நடைப்பெற்று வருகிறது.
POLAND: The Russian ambassador to Poland was attacked with red paint whilst at a ceremony honouring Soviet soldiers killed during WW2. pic.twitter.com/pgCje8NZmi
— Conflict News (@Conflicts) May 9, 2022
இந்தநிலையில், போலந்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த சோவியத் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து சிறப்பிப்பதற்காக ரஷ்யாவின் தூதர்கள் போர் நினைவிடத்திற்கு வந்தனர்.
அப்போது நுற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடி ரஷ்ய துதர்கள் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகநாடுகளை அச்சுறுத்தும் கோதுமை தட்டுபாடு: விலையேற்றத்தால் திண்டாடும் இந்திய மக்கள்
மேலும் இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் ”பாசிஸ்டுகள், பாசிஸ்டுகள்” என முழக்கமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.