உக்ரைனில் வீடுகளை தூள் தூளாக்கிய ரஷ்ய வீரர்: எதிர்கொள்ளவிருக்கும் தண்டனை
உக்ரைனில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்களை, டாங்கி தாக்குதல் நடத்தி அழித்தாக குற்றசாட்டப்பட்ட ரஷ்ய படைவீரர் மிகைல் குலிகோவ் 8 முதல் 12 வரை சிறைத் தண்டனை எதிர்கொள்ள இருக்கிறார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஐந்தாவது மாதத்தை தொடவிருக்கும் நிலையில், போர் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் ரஷ்ய படைகள் மீது பல்வேறு போர் குற்றங்களை உக்ரைனிய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
மேலும் இரு நாட்டு ராணுவமும் எதிரி நாட்டு ராணுவ வீரர்களை சிறைப்பிடித்து பிணைக் கைதிகளாக வைத்து இருப்பதுடன் மட்டும் இல்லாமல் அவர்களுக்கான தண்டனையும் அறிவித்து வருகின்றனர்.
The case of Russian serviceman Mikhail Kulikov, who is accused of tank shelling a residential building on February 26, has begun in Chernihiv.
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 24, 2022
He faces between eight and 12 years in prison for violating the laws and customs of war. pic.twitter.com/eUvSdIAv6e
அந்தவகையில், சமீபத்தில் ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் உக்ரைன் படைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய இரண்டு பிரித்தானிய வீரர்களை மரியுபோலில் சிறைப்பிடித்த ரஷ்ய ராணுவம் அவர்களுக்கு மரணத் தண்டனையை அறிவித்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 26 அன்று குடியிருப்பு கட்டிடத்தின் மீது தொட்டி ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர் மிகைல் குலிகோவ்விற்கு(Mikhail Kulikov) 8 முதல் 12 வரையிலான சிறைத் தண்டனை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: வானில் இருந்து விழுந்து நொருங்கிய ரஷ்ய ராணுவ விமானம்: தீப்பற்றி எரியும் பரபரப்பு வீடியோ!
இதுத் தொடர்பான வழக்கு இன்று உக்ரைனின் செர்னிஹிவில் தற்போது தொடங்கி இருக்கும் நிலையில், அவர் மீது போரின் சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மீறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.