ரஷ்யாவின் வெற்றியை பறைசாற்றும் Z சின்னம்: வெளிவந்த புதிய விளக்கங்கள்!
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் ராணுவ துருப்புகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் "இசட்" சின்னத்திற்கு "வெற்றி" மற்றும் "மேற்கு" என இரு புதிய விளக்கங்கள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் இரண்டு வாரங்களுக்கு மேலாக ரஷ்ய ராணுவங்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனுக்குள் சுற்றி திரியும் ரஷ்ய டாங்கிகள், போர் விமானங்கள், ராணுவ வாகனங்கள் என அனைத்தின் மீதும் "இசட்" சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது.
1943ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரில் நாசிகள் பயன்படுத்திய சினத்துடன் இந்த "இசட்" சின்னம் ஒத்துப்போவதாக பல கருத்து வெளிவந்து கொண்டிருக்கையில் தற்போது இதற்கான புதிய இரண்டு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதில் "இசட்" என்றால் 'ஜாபோபெடி "za pobedy" (வெற்றி) மற்றும் ஜாபேட் "Za pad' (மேற்கு) எனவும் புதிய இரண்டு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 22ம் திகதி கிளர்ச்சியாளர்கள் பகுதிக்குள் ரஷ்ய ராணுவ துருப்புகள் நுழைந்த போது கவனிக்கப்பட்ட இந்த சின்னம் ஆனது, 2014ல் நடைபெற்ற கிரீமியா பிரச்சனையின் போதே ரஷ்யா ராணுவ வாகனங்களில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த "இசட்" சின்னம் மூலம் ரஷ்ய வாகனங்களை அடையாளம் கண்டுகொண்டு தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்துவதை தவிர்க்கவும், ரஷ்யாவின் சித்தாந்தத்தை தெரிவிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த "இசட்" சின்னத்தை போலவே ரஷ்ய ராணுவத்தில் "இரண்டு கோடுகளுக்கு நடுவே முக்கோணம்", "மூன்று புள்ளிகள் அடங்கிய வட்டம்" மற்றும் "பெரிய முக்கோணத்திற்குள் ஒரு சிறிய முக்கோணம்" என மேலும் சில சின்னங்களை ரஷ்யா பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.