ரஷ்ய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான விசா வழங்கல்: உக்ரைன் அமைச்சர் வெளிப்படை
- ரஷ்ய குடிமக்கள் லாட்வியா, பின்லாந்து மற்றும் எஸ்டோனியா நுழைய தடை.
- ரஷ்ய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என குலேபா கருத்து.
ரஷ்ய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா சனிக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 172வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை நடத்துவதாக தெரிவித்து அமெரிக்கா ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
அந்தவகையில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான லாட்வியா, பின்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகியவை ரஷ்ய குடிமக்களுக்கு தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்தனர்.
இந்தநிலையில் உக்ரைன் அனைத்து ரஷ்ய குடிமக்கள் மீதும் வீசா தடையை எதிர்பார்க்கவில்லை என உக்ரைனிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா சனிக்கிழமை தெளிவுபடுத்தினார்.
அத்துடன் புகலிடம் அல்லது மனிதாபிமான நுழைவு தேவைப்படும் ரஷ்யர்களை யாரும் தடை செய்ய முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இந்தியாவின் முக்கிய பணக்காரர் ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பு...”அவர் அடக்க முடியாதவர்” என மோடி இரங்கல்
மேலும் ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணத்திலிருந்து தடை விதிக்கப்படும் வாய்ப்பைக் கண்டு வருத்தமடைந்த ரஷ்யர்கள் தங்கள் புகார்களை தங்கள் அரசுக்கும், போரை ஆதரிக்கும் 70% க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் தெரிவிக்கலாம் என்று குலேபா தெரிவித்துள்ளார்.