விளாடிமிர் புடினின் எதிரி... உலகம் முழுவதும் 100 பிள்ளைகளுக்கு தந்தையான பெரும் கோடீஸ்வரர்
ரஷ்யாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவர் உலகம் முழுவதும் 100 பிள்ளைகளுக்கு தாம் தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
புடினின் எதிரிகளில் ஒருவர்
அது தமது கடமை என்றும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மட்டுமின்றி ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக ஊடக செயலியான டெலிகிராமை உருவாக்கி அறிமுகம் செய்தவர் Pavel Durov.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் எதிரிகளில் ஒருவர் என அடையாளப்படுத்தப்படும் இவரின் மொத்த சொத்து மதிப்பு என்பது 13.6 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
டெலிகிராம் செயலி மட்டுமின்றி ரஷ்யாவின் பேஸ்புக் என அறியப்படும் சமூக ஊடக பக்கம் ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். 39 வயதான இதுவரை திருமணம் செய்துகொள்ளாத Pavel Durov தற்போது உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், தாம் மிகப்பெரிய விந்தணு தானம் செய்பவர் என்றும் 12 நாடுகளில் சுமார் 100 தம்பதிகளுக்கு விந்து தானம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நண்பர் ஒருவரின் விசித்திரமான கோரிக்கையை ஏற்று கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே விந்து தானம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்னர் விந்து தானம் செய்வதை தவிர்த்து வருவதாகவும், ஆனால் உலகில் ஏதேனும் ஒரு IVF மையத்தில் தமது உறைவிக்கப்பட்ட விந்து பயன்பாட்டிற்கு உள்ளதாகவும், எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் இல்லாமல் அவதிப்படும் தம்பதிகளுக்கு இதுபோன்ற செயற்பாடுகள் உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் புதிய மாறுதலை ஏற்படுத்தும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
வெளிப்படையாக எதிர்ப்பு
Pavel Durov இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், அவரது முன்னாள் துணையான Daria Bondarenko என்பவருடன் இரண்டு பிள்ளைகளை பெற்றுக்கொண்டதாக தகவல் ஒன்று வெளியானது.
ஆனால் இதுவரை அவர்களின் புகைப்படங்கள் அல்லது அடையாளங்கள் வெளியிடப்பட்டதில்லை. 2014ல் உக்ரைன் பகுதியான கிரிமியா மீது சட்டவிரோத படையெடுப்பை ரஷ்யா முன்னெடுத்த விவகாரத்தில் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த Pavel Durov அதன் பின்னர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
மட்டுமின்றி, தமது VK என்ற சமூக ஊடக பக்கத்தின் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை கைமாறக் கோரிய ரஷ்ய நிர்வாகத்திற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.
சுமார் 23.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போதும் செயல்பட்டுவரும் பாவெல் துரோவ் ரஷ்யாவில் இருந்து வெளியேறிய பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார்.
மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டிலும் பிரித்தானிய தீவு நாடான St. Kitts & Nevis-லும் குடியுரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |