ரஷ்ய பில்லியனரின் 600 மில்லியன் டொலர் சொகுசு படகால் இத்தாலி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Russian Billionaire Yacht Costs Italy 11 Mn dollars Yearly: ரஷ்ய பில்லியனரின் சொகுசு படகால் இத்தாலி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து இந்த செய்தி அறிக்கை விளக்குகிறது.
ரஷ்ய பில்லியனரின் 600 மில்லியன் டொலர் சொகுசு படகு
ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரே மெல்னிசென்கோவின் (Andrey Melnichenko) 600 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய "Sailing Yacht A" என்ற அதிநவீன சொகுசு படகை பராமரிப்பதற்காக இத்தாலி அரசு ஆண்டுதோறும் சுமார் 11 மில்லியன் டொலர் செலவழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சொகுசு படகு, சிலரால் "உலகின் மிகவும் அழகற்ற சூப்பர் யாட்" என்றும் அழைக்கப்படுகிறது. சர்வதேச தடைகளின் ஒரு பகுதியாக 2022 மார்ச் மாதத்தில் இத்தாலி அதிகாரிகள் இந்த படகை பறிமுதல் செய்தனர்.
பராமரிப்பு செலவுகள்
அதன் பின்னர், இத்தாலியின் டிரியஸ்டே துறைமுகத்தில் இந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கப்பல் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், அதன் பராமரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் 180 மில்லியன் டொலர் முதலீடு - பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனர்
தினமும் சுமார் 30,000 டொலர் செலவில் 20 பேர் கொண்ட குழு கப்பலை சுத்தமாக வைத்திருப்பதோடு, அதிலுள்ள அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளையும் இயக்கி வருகிறது. காப்பீடு, எரிபொருள், மின்சாரம் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளுக்கான செலவுகளும் இதில் அடங்கும்.
இந்த யாட்டில் நான்கு பெரிய ஜெனரேட்டர்கள் உள்ளன. அவை தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 400 கேலன் டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், கப்பலின் உள்ளே புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மோனே உள்ளிட்ட பலரின் மதிப்புமிக்க ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மாறினால் இந்தக் கலைப்பொருட்கள் சேதமடையும் அபாயம் இருப்பதால், குளிர்சாதன அமைப்பை அணைக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், கப்பலுக்கான கட்டாய தொழில்நுட்ப ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளதால், கூடுதலாக 12 மில்லியன் டொலர் வரை செலவாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்கனவே அதிக நிதிச் சுமையைச் சந்தித்து வரும் இத்தாலி அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |