பெலாரஸில் இருந்து முதல்முறையாக...6 ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைனில் செய்த துணிகர செயல்!
ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து முதல்முறையாக ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைனில் நுழைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல்களானது கிட்டத்தட்ட 122வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது, உக்ரைனிய தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதையடுத்து, துருப்புகள் பின்வாங்கப்பட்டு தற்போது கிழக்கு உக்ரைனிய பகுதிகள் தீவிரமாக தாக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு உக்ரைனிய பகுதிகளின் சில நகரங்களை ரஷ்ய படைகள் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கும் நிலையில், பெரும்பாலான பகுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
?"The bombers took off from Shaykovka airport in Kaluga. Then they entered Belarusian airspace. The strike was carried out on Kyiv, Chernigov, Sumy regions," intelligence reports.
— NEXTA (@nexta_tv) June 25, 2022
"This was the first case of an air strike on #Ukraine from territory of #Belarus," ministry noted.
இந்தநிலையில், ஜூன் 25 திகதி இரவு ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் (Belarus) வான்பரப்பில் இருந்து உக்ரைனிய பகுதிக்குள் நுழைந்த ரஷ்யாவின் ஆறு Tu-22M3 ரக போர் விமானங்கள் பயங்கரமான ஏவுகணை மற்றும் வெடிக்குண்டு தாக்குதலை உக்ரைனிய பகுதியில் நிகழ்த்தியதாக அந்த நாட்டின் உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் கலுகாவில் (Kaluga) உள்ள ஷைகோவ்கா ராணுவ விமான தளத்தில் இருந்து புறப்பட்ட Tu-22M3 போர் விமானங்கள், பின் பெலாரஸ் வான்பரப்பிற்குள் நுழைந்து, அதன் வழியாக உக்ரைனின் தலைநகர் கீவ், செர்னிகோவ், சுமி ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைனிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
AFP/Getty Images
கூடுதல் செய்திகளுக்கு: மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து குதித்த நோயாளி: திக் திக் நிமிடத்தின் பரபரப்பு காட்சி
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி நான்கு மாதங்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில், முதல்முறையாக பெலாரஸ் நிலப்பரப்பில் இருந்து உக்ரைனின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உக்ரைனிய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.