ரஷ்யாவின் கொடூர குண்டு வீச்சு! உக்ரைனில் கொல்லப்பட்ட 13 பேர்: குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் ஜாபோரிஜியா(Zaporizhzhia) நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த மரணச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Russia dropped guided aerial bombs on Zaporizhzhia killing 13 people. 29 more were wounded. @lexfridman still think "forgiving Russia" is what Ukraine should be doing now? pic.twitter.com/rWJS3EVodq
— Kyiv. The City of Courage (@Kyiv) January 8, 2025
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ செய்தியில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்று விவரித்துள்ளார்.
"ரஷ்யா ஜாபோரிஜியாவின் மீது விமானத் தாக்குதல் நடத்தியது" இது அப்பாவி பொதுமக்களை திட்டமிட்டு தாக்குவது என்று அவர் வலியுறுத்தினார்.
பலர் காயமடைந்துள்ளனர் அவர்களுக்கு அனைத்து வகையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, 13 அப்பாவி உயிர்கள் பறிபோயிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்பு கட்டடங்கள் பாதிப்பு
இந்த தாக்குதலில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. உயரமான குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் முக்கியமான கட்டமைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
குண்டுவெடிப்பில் சிதறிய பாகங்கள் ட்ராம் மற்றும் பேருந்துகளில் மோதியதால் பயணிகள் மேலும் ஆபத்தில் சிக்கினர்.
தாக்குதலின் பின் விளைவுகளை காட்டும் வீடியோக்களில், காயமடைந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைக்கும் போராட்டத்தை பார்க்க முடிகிறது.
பிராந்திய ஆளுநர் இவான் ஃபெடோரோவ், ரஷ்ய படைகள் குடியிருப்பு பகுதியை திட்டமிட்டு குறிவைத்து, குறைந்தது இரண்டு குடியிருப்பு கட்டடங்களின் மீது வழிகாட்டப்பட்ட குண்டுகளை வீசியதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |