வடகொரிய தலைவருக்கு Aurus limousine பரிசளித்து மகிழ்ந்த விளாடிமிர் புடின்
வடகொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரிய தலைவருக்கு Aurus limousine பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடின் அளித்துள்ள பரிசுகள்
கடந்த 24 ஆண்டுகளில் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியா சென்றுள்ளார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அசத்தியுள்ளார் வடகொரியாவின் கிம் ஜோங் உன்.
இந்த நிலையில் தற்போது வடகொரிய தலைவருக்கு விளாடிமிர் புடின் அளித்துள்ள பரிசுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Aurus limousine சொகுசு கார் ஒன்றும், விலை உயர்ந்த தேநீர் கிண்ணங்கள் தொகுப்பும், கடற்படைத்தளபதிகளுக்கான உத்தியோகப்பூர்வ குத்துவாள் ஒன்றும் பரிசாக அளித்துள்ளார்.
பதிலுக்கு ஏராளமான ஓவியங்களை வடகொரிய தலைவர் புடினுக்கு பரிசாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முழுமையான ஆதரவு அளிப்பதாக கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார்.
1 மில்லியன் டொலருக்கும் அதிகம்
Aurus limousine வாகனமானது ரஷ்ய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாகனமாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் கிம் கிழக்கு ரஷ்யாவுக்குச் சென்றபோது, அவருக்கு கருப்பு கவச வாகனம் ஒன்றை புடின் காட்டினார்.
அந்த வாகனத்தில் புடினுடன் கிம் பயணப்பட்டிருந்தார். தற்போது அதே வகை கார் ஒன்றை கிம்முக்கு புடின் பரிசளித்துள்ளார். இதன் விலை 1 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |