ஆப்பிரிக்க நாடொன்றில் சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் கார்கோ விமானம்
சூடான் நாட்டில் ரஷ்ய கார்கோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
ராணுவ ஆட்சி
ராணுவ தளபதி ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் ராணுவத்திற்கும், துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருதரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் கார்கோ விமானம் ஒன்று சூடான் வான்பரப்பில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிய வந்துள்ளது.
கார்கோ விமானம்
ஆயுதங்களை கொண்டு சென்ற அந்த விமானம் ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமானது என தகவல் தெரிவிக்கிறது.
எனினும் இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் தெரிய வரவில்லை.
கார்கோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ரஷ்யா விசாரணை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |