போட்டியாளருக்கு விஷம் வைத்த ரஷ்ய செஸ் வீராங்கனை
செஸ் விளையாட்டில் தன் போட்டியாளரான ஒரு பெண்ணின் செஸ் போர்டில் விஷம் தடவிய விளையாட்டு வீராங்கனை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போட்டியாளருக்கு விஷம் வைத்த வீராங்கனை
ரஷ்யாவில், அமினா (Amina Abakarova, 40) என்னும் செஸ் வீராங்கனை, தனது போட்டியாளரான ஒஸ்மனோவா (Umayganat Osmanova) என்னும் பெண்ணுக்குத் தெரியாமல், ரகசியமாக அவரது செஸ் போர்டில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றைத் தடவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒஸ்மனோவா தனது போட்டியாளரான அமினாவைக் குறித்து புறம்பேசுவதுண்டாம். போட்டிகள் நடப்பதற்கு முன் கூட, இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு இருந்ததாம்.
ஆகவே, அமினா, ஒஸ்மனோவாவுக்கு விஷம் வைத்துள்ளார். ஒஸ்மனோவா விளையாட இருந்த செஸ் போர்டில் அவர் அந்த நச்சுத்தன்மை கொண்ட ரசாயனத்தைத் தடவியுள்ளார்.
அவர் எதிர்பார்த்ததுபோலவே, ஒஸ்மனோவாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நச்சு ரசாயனத்தை சுவாசித்த ஒஸ்மனோவாவுக்கு கடுமையான தலைசுற்றலும் மயக்கமும் ஏற்பட்டுள்ளன.
என்றாலும், அதற்குப் பின்பும் விளையாடி பரிசும் வென்றுவிட்டார் ஒஸ்மனோவா.
ஆனால், ஒஸ்மனோவாவுக்கு விஷம் வைத்த அமினா கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |