ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டு புள்ளியை தகர்த்தெறிந்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்
உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ராணுவப்படையின் கட்டுப்பாட்டு மைய புள்ளி ஒன்றை உக்ரைன் விமானப்படை சுட்டு அழித்துள்ளது.
உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24 திகதி ரஷ்யா ராணுவ படையெடுப்பை உக்ரைனில் தொடங்கியது, இந்த நிலையில் மூன்றாவது வாரத்தை எட்டிருக்கும் இந்த போரானது உச்சநிலையை தொட்டுவருகிறது.
உக்ரைன் முக்கிய நகரங்களான கார்க்கிவ், கிரிமீயா, லுஹான்ஸ்க், மரியுபோல் மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் சுற்றி வளைத்துள்ளார்.
Знищено ворожий пункт управління на Київському напрямку.
— Defence of Ukraine (@DefenceU) March 12, 2022
Працюють наші Повітряні Сили!???? pic.twitter.com/lTz5NtvJDF
அதன் தொடர்ச்சியாக போரின் 17வது நாளான இன்று அதிகாலை முதலே உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட பலபகுதிகளில் வான் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலி அதிகமாக ஒலிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீவ்வை சுற்றிவளைத்து அதிகாலை முதலே வான் தாக்குதலை தொடர்ந்த ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலைநகரை நோக்கி முன்னேறி இருந்த ரஷ்ய ராணுவப்படையின் கட்டுப்பாட்டு புள்ளி மையம் ஒன்றை உக்ரைன் விமானப்படை அதிரடியாக சுட்டு அழித்துள்ளது.
மேலும் இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை  உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியீட்டு, கீவ்வை நோக்கி முன்னேறிய ரஷ்ய படையின் கட்டுப்பாட்டு மையம் உக்ரைன் விமானபடையால் அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        