பிரான்ஸில் ரஷ்ய அரசு அலுவலகம் மீது தாக்குதல்! வெளியான பரபரப்பு வீடியோ
பிரான்ஸில் ரஷ்ய அரசு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 12வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், பல நாடுகளில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய நிறுத்த வேண்டும் என கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேசமயம், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனிடையே, வெளியுறவுத்துறை உதவி மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு பொறுப்பான ரஷ்ய அரசாங்க நிறுவனமான Rossotrudnichestvo-வின் பாரிஸ் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova தெரிவித்துள்ளார்.
Zakharova வெளியிடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டை தூக்கி எறிகிறார்.
அது கட்டிடத்தின் பாதுகாப்பு சுவர் மீது தாக்கி தீ பிடித்து எரிகிறது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என Maria Zakharova உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், எங்கள் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்கு சரியான பாதுகாப்பை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று Maria Zakharova கோரியுள்ளார்.