எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் சொன்ன ரஷ்ய ஜோடி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்
Russian Couple Faces Deportation After Empire State Proposal: அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் காதலை வெளிப்படுத்தி கொண்ட ரஷ்ய ஜோடி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அச்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாடு கடத்தப்படும் அச்சத்தில் ரஷ்ய ஜோடி
அமெரிக்காவின் பரபரப்பான நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (Empire State Building)உச்சிக்கு ஏறிச் சென்று சாகசம் செய்து வைரலான ரஷ்ய காதல் ஜோடி, தற்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அச்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் மாஸ்கோ நகரை சேர்ந்த ஏஞ்சலா நிகோலாவ்(Angela Nikolau, 33) மற்றும் இவான் குஸ்நெட்சோவ்(Ivan Kuznetsov, 32) என்ற காதல் ஜோடி, வானளாவிய எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிக்கு சென்று தங்களது காதலை வெளிப்படுத்தி கொண்டதுடன், அன்பின் சக்தி வெல்லும் போது உலகம் அமைதி அடையும் என்று வாசகம் தாங்கிய பதாகையும் பறக்கவிட்டனர்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் வைரலான தோடு, இருவரும் சிறிது நேரத்திலேயே நியூயார்க் நகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை ரஷ்ய ஜோடி நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தால் மிகுந்த வேதனையில் காணப்பட்டனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இவான் குஸ்நெட்சோவ், நாங்கள் எந்த பொது சொத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு யாருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நோக்கமும் இல்லை. அன்பை பரப்பவே நாங்கள் விரும்பினோம் என்று தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏஞ்சலா, உலகம் அதிக வலிகளை சந்தித்து வரும் இந்நிலையில் மக்கள் மனதில் நிலைத்து இருக்க கூடிய அன்பின் கலை நிகழ்ச்சியை நடத்தவே முயற்சி செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
🚨Russian daredevils #Angela_Nikolau (33) & #Ivan_Kuznetsov (32), known as Ivan Beerkus, face potential prison time & deportation to #Russia after plea deal talks broke down with prosecutors in Manhattan. 📌'We wanted to send a message of LOVE' — Daredevil couple & Empire State climbers face PRISON & deportation if convicted of felony charges 📌Manhattan prosecutors BACKED out of an agreed misdemeanour plea deal — Fox News https://t.co/Yjk8SxcNNo
— ⚡️🌎 Sarwar 🌐⚡️ (@ferozwala) November 13, 2026
உடன்பாட்டில் இருந்து வெளியேறிய அரசு தரப்பு
ரஷ்ய ஜோடியின் வழக்கறிஞர் பேசிய போது, இருவரும் குற்றங்களை ஏற்றுக் கொள்ளும் போது குடியேற்ற விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற அரசுத் தரப்பு யோசனைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் விசாரணைக்கு முந்தைய இரவு அரசு தரப்பு இந்த யோசனையில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்கள் நாடு கடத்தப்பட்டால் இவான் குஸ்நெட்சோவ் உக்ரைன் போரில் சண்டையிடுவதற்காக முன்கள வரிசைக்கு அனுப்பப்படலாம் என்றும், ஏஞ்சலா சிறையில் அடைக்கப்படலாம் என்றும் வழக்கறிஞர் நோம் பியேல் கவலை தெரிவித்துள்ளார்.