பழமையான மரத்துக்கு அருகே நிர்வாண போட்டோஷூட் நடத்திய ரஷ்ய தம்பதி
இந்தோனேஷியாவின் பாலியில் பழமையான மரத்துக்கு அருகே நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய ரஷ்ய தம்பதியினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அலினா பஸ்லீவா, தனது கணவருடன் இந்தோனேசிய தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்குள்ள பாலியின் தபானன் மாவட்டத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு சென்றுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, பழமையான மரம் ஒன்றை ரசித்து பார்த்துள்ளார்.
அந்த மரத்துக்கு அருகே நின்ற அலினா பஸ்லீவா, நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார், இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலானது.
ஆனால் தங்களுடைய மத நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டார் என அலினா பஸ்லீவாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து இவர்களின் செயல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும், உள்ளூர் விதிகளை மீறியதாகவும் உள்ளது எனக்கூறி அவரை பாலியை விட்டு வெளியேற உத்தரவிட்டார் குடியேற்றத்துறை தலைவர்.
மேலும் இருவருக்கும் இந்தோனேசியாவில் நுழைய ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட அலினா பஸ்லீவா, நான் தவறு செய்துவிட்டேன், பாலியில் பல புனிதமான இடங்கள் இருந்தாலும் பலகைகள் வைக்கப்படுவதில்லை, மரபுகளை மதிப்பு நடப்பது மிக முக்கியம், அது புனிதமான இடம் என தெரியாததால் இந்த தவறு நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளுடன் ரஷ்ய போர் கப்பல்: நொடிக்குள் பதம் பார்த்த உக்ரைன் ட்ரோன் விமானம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022