250 பில்லியன் டொலர் இழப்பீடு தர வேண்டும்: ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு
பெல்ஜிய நிதிக் குழுமம் சுமார் 250 பில்லியன் டொலர் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முடக்கிய ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவின் பல்லாயிரக்கணக்கான கோடி யூரோ சர்வதேச கையிருப்பை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது.

அதில் பெரும்பகுதி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி வைப்புக்களை கையாளும் பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட தீர்வு நிறுவனமான யூரோகிளியரில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தங்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டதை ரஷ்யா "திருட்டு" என்று வர்ணித்தது. மேலும், டிசம்பரில் அந்த அமைப்பிற்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது.
250 பில்லியன் டொலர் இழப்பீடு
இந்த நிலையில், யூரோகிளியர் (Euroclear) சுமார் 250 பில்லியன் டொலர் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதியை ரஷ்யா எவ்வாறு மீட்க உத்தேசித்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்ய நீதிமன்றங்களுக்கு வெளிநாடுகளில் அதிகார வரம்பு இல்லை என்றும், ஐரோப்பிய நீதிமன்றத்தில் தனது வழக்கை விசாரிக்க மாஸ்கோவிற்கு தெளிவான வழி இல்லை என்றும் சட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் ரஷ்ய நீதிமன்றத்தின் அதிகார வரம்பை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று யூரோகிளியர் கூறியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |