கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்
50 மில்லியன் அபராதத்திற்கு எதிராக கூகுள் செய்த மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.
Google நிறுவனம்
உக்ரைன் போர் பற்றிய போலித் தகவலை நீக்கத் தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 4.6 பில்லியன் ரூபிள் (49.4 மில்லியன் டொலர்) அபராதம் விதித்தது.
பயங்கரவாத உள்ளடக்கத்தை அகற்ற கூகுள் (Google) தவறியதாகவும், LGBT பிரச்சாரம் என்று ரஷ்யா அழைக்கும் பரப்புரைக்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அப்போது தெரிவித்தன.
மேல்முறையீடு நிராகரிப்பு
டிசம்பரில் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த அபராதம், ரஷ்யாவில் கூகுளின் வருடாந்திர வருவாயில் ஒரு பங்காக கணக்கிடப்பட்டது.
இந்த நிலையில், ஆல்பாபெட்டின் கூகுள் மீண்டும் அபாரதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. ஆனால், ரஷ்ய நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, 2021யின் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிள் மற்றும் 2022யில் 21.2 பில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டு, அப்போதும் கூகுளின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |