அமெரிக்காவுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்! ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷாய்கு எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டிரோன்
கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்ததால், ஆத்திரமடைந்த ரஷ்யா அதனை சுட்டு வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவிடம் சர்வதேச ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
மேலும், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்றும் அமெரிக்கா கூடியது.
@Reuters
இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான செர்கெய் ஷாய்கு கூறுகையில், 'ரஷ்ய எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் டிரோன் எதிர்காலத்தில் பறந்தால், அந்த அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' என எச்சரித்துள்ளார்.
TASS

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.