உக்ரைனின் துறைமுக நாரத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 3 பேர் காயம், குடியிருப்புகள் சேதம்
உக்ரைனின் முக்கிய துறைமுக நாரத்தில் ரஷ்யா நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் கருங்கடல் கரையோர நகரமான ஒடெசாவில், ரஷ்யா திங்கட்கிழமை இரவில் நடத்திய பாரிய அளவிலான ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பல குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் தீக்கிரையாகியும் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடெசா மேயர் ஹென்னாடி த்ருக்கானோவ், "மிகவும் அடர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியை எதிரி குறிவைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
அவரது டெலிகிராம் பதிவில் தீப்பற்றிய கட்டடங்களும், சாளரங்கள் உடைக்கப்பட்டதும், முகப்புகள் சேதமடைந்ததுமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஒடெசா மாநில ஆளுநர் ஓலெக் கிபர், "மூன்று பேர் காயமடைந்து மருத்துவ உதவி பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் குடியிருப்புகள், கல்வி நிறுவனம், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வசதிகள் சேதமடைந்துள்ளன." என்று கூறியுள்ளார்.
உக்ரைனின் வான்படையின் தகவலின்படி, கடந்த இரவிலான தாக்குதலில் ரஷ்யா 54 ட்ரோன்களை ஏவியது.
இதில் 38 ட்ரோன்கள் தள்ளப்பட்டு வீழ்த்தப்பட்டன. 16 ட்ரோன்கள் இலக்கை அடையவில்லை. இது, மின்னணு தடுப்பு உபகரணங்கள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடெசா, உக்ரைனின் முக்கியமான மூன்று துறைமுகங்களை கொண்ட நகரம் என்பதால், போர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |